கப்பலூர் டோல்கேட் அருகே ஒரு வருடத்திற்கு மேலாக செயல்படாமல் கிடக்கும் குடிநீர் வழங்கிடும் புதிய ஏடிஎம் மிஷின்கள்: பொதுமக்கள் அதிருப்தி!

செவ்வாய்க்கிழமை, 4 ஜூன் 2019      மதுரை
5 tmm water atm

திருமங்கலம்.- நான்கு வழிச்சாலையில் வாகனங்களில் பயணித்திடுவோரின் வசதிக்காக மதுரை திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பகுதியில் ஒரு ரூபாய் காயின் போட்டால் ஒரு லிட்டர் தூய குடிநீர் வழங்கிடும் புதிய வாட்டர் ஏடிஎம்  மிஷின்கள் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக செயல்பாட்டிற்கு வராமல் வெயிலில் கிடந்து வீணாகி வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கிடும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள நான்கு வழிச்சாலைகளில் வாகனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளும் அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது.இருப்பினும் குடிநீர் வசதி சரிவர கிடைக்காததால் வாகனங்களில் தொலைதூர பயணம் மேற்கொண்டு வருபவர்கள் குடிநீருக்கு கூடுதல் விலை கொடுத்து தரமற்ற குடிநீர் பாட்டில்களை வாங்கி அருந்திட வேண்டிய அவல நிலை உள்ளது.இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பராமரிப்பில் உள்ள நான்குவழிச்சாலைகளின் ஓரத்தில் வாகனங்களில் பயணம் மேற்கொள்வோர் தங்களை புத்துணர்வு செய்து கொள்வதற்காக சிற்றுண்டியுடன் குளிர்பானங்களை விற்பனை செய்திடும் நெஸ்ட்(மினி) எனும் புத்துணர்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக திருமங்கலம் அருகேயுள்ள கப்பலூர் டோல்கேட் பகுதியில் நான்குவழிச்சாலையோரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள  நெஸ்ட்(மினி) புத்துணர்வு மையத்தில் ஒரு ரூபாய் காயின் போட்டால் ஒரு லிட்டர் தூய குடிநீர் வழங்கிடும் இரண்டு வாட்டர் ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வரப்பட்டது.இந்த புத்துணர்வு மையத்தில் இளைப்பாறிவிட்டு வாட்டர் ஏடிஎம்-மில் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் என தேவயான அளவு தண்ணீர் வாங்கிடலாம் என்ற கனவில் பொதுமக்கள் காத்து கிடந்தனர்.
ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கப்பலூர்  நெஸ்ட் மையத்தின் முன்பாக வைக்கப்பட்ட இந்த வாட்டர் ஏடிஎம் மிஷின்கள் இன்று வரை இயக்கப்படாமல் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் துருப்பிடித்து வீணாகி வருகிறது.பல லட்சம் மதிப்பிலான இந்த வாட்டர் ஏடிஎம் மிஷின்கள் தற்போது தங்களது செல்பாட்டு தன்மையை இழந்து ஒன்றுக்கும் உதவாமல் போய்விடும் நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் இந்த பொறுப்பற்ற தன்மை காரணமாக கப்பலூர் டோல்கேட் பகுதி நெஸ்ட் மையத்தில் திறந்தவெளியில் செயல்படாமல் கிடக்கும் வாட்டர் ஏடிஎம் இயந்திரங்களால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மேலும் செயல்படாத நெஸ்ட் மையம் மற்றும் பராமரிப்பற்ற கழிவறை அருகே கிடக்கும் இந்த வாட்டர் ஏடிஎம் மிஷின்களை கப்பலூர் டோல்கேட்டில் வைத்து முறையாக பராமரித்து நெடுந்தொலைவு பயணம் மேற்கொண்டு வருபவர்களுக்கு தூய குடிநீர் எற்பாடு செய்து தந்திட வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து