வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டிவிகிதம் 0.25 சதவீதம் குறைப்பு

வியாழக்கிழமை, 6 ஜூன் 2019      வர்த்தகம்
reserve bank of india 2019 04 04

 புதுடெல்லி : வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.  

ஆலோசனை...

ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நிதிக்கொள்கை குழு நேற்று  கூடியது. இக்கூட்டத்தில் நிதிக் கொள்கைக் குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு வட்டி விகிதங்கள், சர்வதேச பொருளாதார நிலை, பணவீக்கம், ரூபாய் மதிப்பு நிலவரம் குறித்து விரிவாக ஆலோசித்தனர். இந்த கூட்டத்தின் முடிவில், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரெப்போ வட்டி விகிதம் 6 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் 3-வது முறையாக குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. 

7 சதவீதமாக...

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக குறையும் என ரிசர்வ் வங்கி கணித்துள்ளது. இதேபோல் இணையதள பணபரிமாற்ற கட்டணங்களை நீக்கவும் ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீட்டுக் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி குறைக்கப்படும் என தெரிகிறது.

Pillayar Patti Lord Vinayagar temple | பிள்ளையார்பட்டி கற்பக மூர்த்தி விநாயகர் திருக்கோயில் வரலாறு

அம்மியில் அரைத்து, மசாலா உதிராமல் மீன் வறுவல் | Traditional Fish fry in tamil | Viraal meen varuval

How to Make Coconut Oil at Home| வீட்டிலேயே தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி| Homemade Coconut Oil

Nattu kozhi Pepper Fry in Tamil | நாட்டு கோழி மிளகு கறி | Chicken Pepper fry | Country Chicken Fry

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Chicken Popcorn Recipes in Tamil |சிக்கன் பாப்கார்ன்|Crispy Fried Chicken|Chicken Recipes in Tamil

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து