முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 வித போட்டிகளில் விளையாடுகிறது: நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி

வெள்ளிக்கிழமை, 7 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

கிறிஸ்ட்சர்ச் : இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது.

சுற்றுப்பயணம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் டெஸ்ட் தரவரிசையில் உள்ள முதல் 9 அணிகள் பங்கேற்க உள்ளன. அந்த வகையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளது. தற்போது டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்திலும், நியூசிலாந்து அணி 2-ம் இடத்திலும் உள்ளன.

3 வித போட்டிகளில்...

அதேபோல் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடர்களிலும் இந்திய அணி விளையாட உள்ளது. 2020-ம் ஆண்டு ஜனவரி 24 தேதி தொடங்கும் இத்தொடர் மார்ச் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோன்று இந்தியா 'ஏ' அணியும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் (4 நாள்) போட்டிகளிலும் விளையாட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து