முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்க பிரிட்டனுக்கு அமெரிக்கா கோரிக்கை

புதன்கிழமை, 12 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : விக்கிலீக்ஸ் தலைவரான ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திற்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.

18 வகை குற்றங்கள்...

அமெரிக்க அரசின் ரகசிய தகவல்கள், ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மற்றும்  அமெரிக்காவின் முன்னாள் இராணுவ விராங்கனை செல்சியா மானிங் உடன் சேர்ந்து பாதுகாப்பு துறையின் கணினியை ஹேக் செய்ய முற்பட்டது போன்ற 18 வகையான குற்றச்சாட்டுகள் விக்கிலீக்ஸ் தலைவர் ஜூலியன் அசாஞ்சே மீது உள்ளன. மேலும் உளவு பார்த்ததற்கான குற்றச்சாட்டும் அலெக்சாண்ட்ரியா மத்திய நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

பிரிட்டனில் கைது...

லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகம், கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, ஜூலியன் அசாஞ்சேவுக்கு 2012-ம் ஆண்டு அடைக்கலம் அளித்தது. கடந்த ஏப்ரல் 11ம் தேதி அவருக்கு அளித்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டதை அடுத்து, ஈகுவடார் தூதரகத்திற்குள்ளே சென்று பிரிட்டன் போலீஸார் அவரைக் கைது செய்தனர். விக்கிலீக்ஸ் தொடங்கப்பட்ட ஸ்வீடன் நாட்டில், அவர்மீது பாலியல் புகார்கள் எழுப்பப்பட்டு அவரை விசாரணைக்கு அழைத்தது ஸ்வீடன் அரசு.

வேவு பார்த்ததாக...

முதலில் அரசுத்துறையின் கணினியை ஹேக் செய்ததற்கு மட்டுமே குற்றஞ்சாட்டப்பட்டார். ஆனால் சில சட்ட வல்லுநர்கள் கூறுகையில்,  கூடுதலாக அவர்மீது சுமத்தப்பட்டுள்ள வேவு பார்த்ததற்கான குற்றச்சாட்டுகளை அரசியல் குற்றங்களாக மட்டுமே பிரிட்டிஷ் அரசு பார்க்கும் நிலையில், அவரை நாடு கடத்தும் நடைமுறை இன்னும் தாமதமாகலாம் அல்லது மேலும் சிக்கல் ஆகலாம் என்கின்றனர்.

அமெரிக்கா கோரிக்கை

இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சேவை ஒப்படைக்குமாறு பிரிட்டன் அரசாங்கத்திற்கு அமெரிக்கா முறைப்படி கோரிக்கை வைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய அமெரிக்காவின் முன்னாள் இராணுவ விராங்கனை செல்சியா மானிங் 7 வருடம் இராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து