தமிழகத்தில் 10 நகரங்களில் அனல்காற்றுக்கு வாய்ப்பு

புதன்கிழமை, 12 ஜூன் 2019      தமிழகம்
chennai hotwind 2019 03 06

சென்னை : தமிழகத்தில் 10 நகரங்களில் 2 நாட்களுக்கு அனல்காற்று வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை

சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர், திருச்சி, பெரம்பலூர், சேலம் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இரண்டு நாட்கள் அனல் காற்று வீச வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகம் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், கன்னியாகுமரி, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து