முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழையால் தள்ளிப்போன கோலியின் சாதனைகள்

வியாழக்கிழமை, 13 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

நாட்டிங்காம் : உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைக்கவிருந்த 2 சாதனைகளுகம் தள்ளிப்போனது.

மழையால் ரத்து...

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் 18-வது ‘லீக்‘ ஆட்டம் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று மாலை நடைபெறவிருந்தது. முன்னதாக இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவையும், 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி இருந்தது. ஆனால் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

9-வது வீரர்...

நேற்றைய ஆட்டத்தில் விராட்கோலி 11 ஆயிரம் ரன்னை கடப்பார்  என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதற்கு அவருக்கு இன்னும் 57 ரன்களே தேவை. ஆனால் போட்டி ரத்தானதால் சாதனை தள்ளிப்போனது. இதேபோல் 11 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் கடந்தவர் என்ற சாதனையை கோலி பெறுவார் என்று எதிர்பார்ப்பும் தள்ளிப்போனது. அடுத்த போட்டிகளில் இதை அவர் எட்டும் பச்சத்தில் சர்வதேச அளவில் 9-வது வீரர் என்ற பெருமையை பெறுவார். தெண்டுல்கர், கங்குலி ஆகியோருக்கு பிறகு 11 ஆயிரம் ரன் எடுக்கும் 3-வது இந்தியர் என்ற சாதனையை பெறுவார்.

183 ரன்கள் குவிப்பு...

30 வயதான கோலி 229 போட்டியில் 221 இன்னிங்சில் விளையாடி 10,943 ரன் எடுத்துள்ளார். சராசரி 59.47 ஆகும். அதிகபட்சமாக 183 ரன் குவித்துள்ளார். 41 சதமும், 50 அரை சதமும் எடுத்துள்ளார். ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் கோலி சதம் அடித்தால் நியூசிலாந்துக்கு எதிராக 9 சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் மற்றும் இந்திய வீரர் சேவாக் சாதனையை சமன் செய்வார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து