கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்: அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      தமிழகம்
tn gov23-11-2018

சென்னை, தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாடு...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையை சுற்றியுள்ள முக்கிய ஏரிகளான செம்பரம்‌பாக்கம், புழல், சோழவரம் ஆகிய ஏரிகள் வறண்டு காணப்படுகின்றன. இதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது.

அரசு உத்தரவு...

இந்நிலையில் தமிழகம் முழுவதும் கிராமங்களில் கால்நடைகளுக்கு தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்துத கருத்து தெரிவித்த கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கிராமங்களில் கால்நடைகளுக்கென தண்ணீர்த் தொட்டிகள் அமைக்கப்படும் என்றார். மேலும், இது தொடர்பா‌க, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து