முதல்வர் எடப்பாடி டெல்லி பயணம்: பிரதமர் தலைமையில் இன்று நடைபெறும் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      தமிழகம்
cm-delhi 2019 06 14

சென்னை, பிரதமர் மோடி தலைமையிலான நிதிஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று புதுடெல்லி புறப்பட்டு சென்றார்.

டெல்லி பயணம்...

மத்தியில் பாஜ தலைமையிலான கூட்டணி, இரண்டாவது முறையாக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. பாஜ கடந்த முறை ஆட்சியமைத்தப்போது திட்டக்கமிஷன் கலைக்கப்பட்டு நிதிஆயோக் அமைக்கப்பட்டது. இப்போது இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், நிதிஆயோக் கூட்டம் புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இரண்டாவது முறையாக இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசு அழைப்பு விடுத்தது. அதனையேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புதுடெல்லி புறப்பட்டார். அவருடன் தலைமை செயலாளர் கிரிஜாவைத்தியநாதன் உடன் சென்றுள்ளார்.

பிரதமருடன் சந்திப்பு...

இந்த கூட்டத்தில் விவசாயிகள் மே்ம்பாடு, விவசாய உற்பத்தி, ,வேலைவாய்ப்பை அதிகரிப்பது போன்றவை குறித்து நிதிஆயோக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது மேலும் நாடாளுமன்றம்வரும் 17 ம்தேதி கூட்டப்படவிருக்கிறது,.பிரதமராக மோடி பொறுப்பேற்றப் பின்னர் வரு்ம் ஜூலை 5ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல்செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி விவாதிக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உற்சாக வரவேற்பு...

இந்த கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியுடனும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனும் சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கி தமிழகத்திற்கான திட்டங்களுக்கு நிதிஉதவிகோருவார் என்று தெரிகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற முதல்வரை, புதுடெல்லியில் முன்னாள் மக்கள்வைத் துணைசபாநாயகர் தம்பிதுரை, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலாசத்யானந்த் உள்ளிட்டோரும் அதிமுகவினரும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த கூட்டத்தை புறக்கணிக்க போவதாக மேற்குவங்கமுதல்வர் மம்தா அறிவித்துள்ள நிலையில், கேரளமுதல்வர் விஜயன், தெலங்கானாமுதல்வர் சந்திரசேகரராவ், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக்,பீகார்முதல்வர் நிதிஷ்குமார்கலந்துகொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து