முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 வருடத்திற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது: ஜோல் கார்னர்

வெள்ளிக்கிழமை, 14 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

லண்டன் : வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகபந்து வீச்சாளரான ஜோல் கார்னர், 40 வருடத்திற்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரியான கலவை...

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக திழந்தவர் ஜோல் கார்னர். 6 அடி 8 அங்குலம் உயரம் கொண்ட இவரது பந்து வீச்சு, 1979-ம் ஆண்டு உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்தது. 1979-க்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் உலகக்கோப்பையை வென்றது கிடையாது. இந்த முறை சரியான கலவை கொண்ட அணியாக வெஸ்ட் இண்டீஸ் திகழ்கிறது. இதனால் 40 வருடத்திற்குப் பிறகு கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக ஜோல் கார்னர் தெரிவித்துள்ளார்.

இறுதிக்கு முன்னேறுவோம்...

இதுகுறித்து ஜோல் கார்னர் கூறுகையில் ‘‘நாங்கள் எதிர்பார்த்தது தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த வகையில் நாங்கள் விளையாடுவதை வைத்து பார்க்கும்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறுவோம். இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிட்டால், அதன்பின் கோப்பையை கைப்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. நான் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்தன் என்பதால், நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறேன். அரையிறுதி போட்டி வாய்ப்பை பெறும்போது, உண்மையான கிரிக்கெட் யுத்தம் ஆரம்பமாகும்.

மகிழ்ச்சியடைவேன்...

கேப்டன் ஜேசன் ஹோல்டர் கடுமையாக உழைக்கிறார். மேலும் சிறந்த கேப்டனாக மாறிக் கொண்டிருக்கிறார். அவர் உலகக்கோப்பையை கையில் ஏந்தினால் நான் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் நாங்கள் உலகக்கோப்பையை வென்று பல வருடங்கள் ஆகிவிட்டன’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து