தவானுக்கு காயம் காரணமாக அழைக்கப்பட்ட ரி‌ஷப்பந்த் இந்திய அணியோடு இணைந்தார்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Rishaband 2019 06 15

லண்டன் : தவானுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் ரி‌ஷப்பந்தை இங்கிலாந்து வருமாறு அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டதையடுத்து அவர் இந்திய அணியோடு இணைந்துள்ளார்.

3 வாரங்களுக்கு...

ஆஸ்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்த தொடக்க வீரர் தவானுக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக அவரால் மூன்று வாரங்களுக்கு விளையாட முடியாது. 2 முதல் 3 போட்டிகள் வரை அவர் ஆடமாட்டார்.

இணைந்தார்...

ஆனாலும் தவானுக்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே ரி‌ஷப்பந்தை இங்கிலாந்து வருமாறு அணி நிர்வாகம் கேட்டுக் கொண்டது. இதைத் தொடர்ந்து அவர் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். மான்செஸ்டர் சென்று அவர் இந்திய அணியோடு இணைந்து கொண்டார்.

பயிற்சியில் மட்டும்...

இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை என்பதால் உலக கோப்பையில் விளையாட முடியாது. அணி வீரர்களோடு அவர் பயிற்சியில் மட்டும் ஈடுபடலாம். ஏற்கனவே வேகப்பந்து வீரர் கலீல்அகமது பேட்ஸ்மேன்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பந்து வீசி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து