தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை மனு

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      இந்தியா
cm-modi 2019 06 15

டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி கோரிக்கை மனு அளித்தார். மேலும், மத்திய அமைச்சர்களுடனும் அடுத்தடுத்து சந்தித்து தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்து பேசினார்.

முதல்வர்களுக்கு அழைப்பு...

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை அமைத்துள்ளது. புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக்கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

பிரதமர் மோடியுடன்...

அதை தொடர்ந்து இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு, விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரும் சென்றனர். டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு நேற்று காலை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் பிரதமர் இல்லத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி அங்கு மோடியை சந்தித்துப் பேசினார். தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கான கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் அப்போது முதல்வர் எடப்பாடி அளித்தார்.

மேகதாதுவில் அணை...

இந்தச் சந்திப்பின்போது, தமிழகம் சந்தித்து வரும் வறட்சி, காவிரி நீர் பிரச்னை உள்ளிட்ட விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் எடுத்துரைத்ததாக தெரிகிறது. மேலும், கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று அப்போது வலியுறுத்தினார். தமிழக குடிநீர் திட்டங்களுக்கு தேவைக்கான ரூ.5 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். மேலும், ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு ஏற்படும் இழப்பை சரிசெய்ய மத்திய அரசு தேவையான நிதியை தமிழத்திற்கு வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம், முதல்வர் எடுத்துரைத்தார்.

மத்திய அமைச்சர்களுடன்...

பிரதமரை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். மத்திய நிதித்துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு அவர் மலர்க்கொத்து வழங்கினார். டெல்லியில் மத்திய ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத்தையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போதும் அமைச்சர் ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தனர்.

நிதின் கட்காரியுடன்...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரியையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். தமிழகத்திற்கான நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவையும் நிதின் கட்கரியிடம் அவர் வழங்கினார்.

ஜல சக்தி துறை அமைச்சருடன்...

ஜல சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று சந்தித்து பேசினார். காவிரி நதிநீர் ஆணைய உத்தரவு படி தமிழகத்துக்கு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் கர்நாடக அரசு, மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்றும் அவர், அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் வலியுறுத்தினார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து