மருத்துவர்களை பாதுகாக்க தனி சட்டம்: மாநில முதல்வர்களுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      இந்தியா
Harsh-Vardhan 2019 06 15

மருத்துவர்களை பாதுக்காக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்ற அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி உள்ளார்.

மேற்கு வங்காளத்தில் பயிற்சி மருத்துவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் டாக்டர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். டாக்டர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் நேற்று முன்தினம் போராட்டம் நடத்த அகில இந்திய மருத்துவ கவுன்சில் அழைப்பு விடுத்தது. இதை ஏற்று நேற்று முன்தினம் நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் முடங்கியது. பல இடங்களில் பணியில் இருந்த மருத்துவர்களும், தலையில் ஹெல்மெட் அணிந்தும், உடையில் கருப்பு பட்டை அணிந்தும் பணி செய்தனர். டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் பேரணி  நடத்தினர். இதை போல திருவனந்தபுரம், ஐதராபாத், மும்பை போன்ற நகரங்களிலும் டாக்டர்களின் போராட்டத்தால் மருத்துவ பணிகள் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்ற வேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கடிதம் எழுதி உள்ளார். நாடு முழுவதும் வரும் நாளை திங்கட்கிழமை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ள நிலையில் இவ்வாறு மத்திய அமைச்சர் அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து