கோலி வீடியோவை பார்த்து பயிற்சி எடுக்கும் பாகிஸ்தான் வீரர் ஆஸம்

சனிக்கிழமை, 15 ஜூன் 2019      விளையாட்டு
Babar azam - virat-kohli 2019 06 15

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் ஆஸம், இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி ஆடும் வீடியோவை பயிற்சி எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 67 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பாபர், 9 சதம், 13 அரைசதங்கள் அடித்துள்ளார். பாகிஸ்தான் அணியின் தூணாக விளங்கும் இவரையும் விராத் கோலியையும் ஒப்பிட்டு கிரிக்கெட் வல்லுநர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் பாபர் ஆஸம் அளித்த பேட்டியில், ‘’விராத் கோலியின் பேட்டிங் ஸ்டைலை வீடியோவில் பார்த்து பயிற்சி எடுத்துவருகிறேன். பல்வேறு சூழ்நிலையில் அவர் எப்படி ஆடுகிறார் என்பதை கவனித்து, அதையே நானும் பின்பற்றுகிறேன். விராத் கோலியின் வெற்றி சதவிகிதம் அதிகமாக இருக்கிறது. அதை போல நானும் சாதிக்க நினைக்கிறேன். கடந்த 2 வருடத்துக்கு முன் நடந்த சாம்பியன் டிராபி இறுதிப் போட்டியில், இந்தியாவை வென்றது எங்கள் அணியின் நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. அந்த வெற்றி எங்கள் நினைவை விட்டு எப்போதும் விலகாது.

இந்திய அணியில் சிறந்த பந்துவீச்சு இருக்கிறது என்பதும் தெரியும். அதே நேரம் நாங்களும் சிறந்த பந்துவீச்சை கொண்ட இங்கிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறோம். அதனால் அதை சரியாக கையாள்வோம்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து