முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெயில் தாக்கம் குறையும் வரை வெளியில் செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் - மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

பாட்னா : வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு பருவ மழை தொடங்கி பல மாநிலங்களில் மழை பெய்து வரும் நிலையிலும் நாட்டின் பல மாநிலங்களில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. வட மாநிலங்களில் கடுமையான வெயில் தாக்கம் உள்ளது. இந்நிலையில், பீகார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கடுமையான வெயிலுக்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 30 பேர் பலியானார்கள்.

இதுதொடர்பாக, சதார் மருத்துவமனை டாக்டர் சுரேந்திரகுமார் சிங் கூறுகையில், வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட 30 பேர் நேற்று முன்தினம் மதியம் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 10 பேர் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் மயக்கமாகவும், சிலர் மனநிலை தடுமாற்றத்துடனும் உள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், வெயிலுக்கு பலியானோர் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்

இந்நிலையில், வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பாட்னாவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெயிலின் தாக்கத்தால் பலர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமானது. வெயிலின் கடுமையான வெப்பம் பல்வேறு உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, வெயிலின் தாக்கம் குறையும் வரை பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து