அமெரிக்க இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி: இந்தியாவில் அமலுக்கு வந்தது

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
US imports addition tax 2019 06 16

புது டெல்லி : அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 28 வகையான பொருட்களுக்கு, இந்தியாவில் சுங்க வரி உயர்த்தப்பட்டது நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் உருக்கு, அலுமினிய பொருட்களுக்கான வரியை, கடந்த ஆண்டு, 25 சதவீதம் அதிகரித்தது, அமெரிக்கா. இதனால், இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது. இதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும், பாதாம், வால்நட் உள்ளிட்ட 28 வகையான பொருட்கள் மீது, கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இது நேற்று  முதல் அமலுக்கு வந்தது. முதலில் 29 பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிடப்பட்டது. அர்த்தீமியா என்ற இறால் வகை மட்டும் அதிலிருந்து நீக்கப்பட்டது. கூடுதல் வரி மூலம் 217 மில்லியன் டாலர் கூடுதல் வருமானம் இந்தியாவுக்கு கிடைக்கும். மத்தய அரசு முடிவால், அமெரிக்க ஏற்றுமதியாளர்கள், இந்த 28 பொருட்களுக்கு கூடுதல் வரி செலுத்த வேண்டியிருக்கும். இந்திய சந்தைகளிலும் இதன் விலை அதிகரிக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து