முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை - தமிழகத்தில் இன்று முதல் அமல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும் விற்பதற்கும் அரசு தடை விதித்தது. தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் விற்பதாக புகார் எழுந்துள்ள நிலையில், இன்று முதல் பிளாஸ்டிக்கை விற்பனை செய்வோர் மற்றும் பயன்படுத்துவோரிடம் அபராதம் வசூலிக்கப்பட உள்ளது. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள், வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல் முறை பிடிப்பட்டால் 25 ஆயிரமும், இரண்டாவது முறை பிடிப்பட்டால் ஐம்பதாயிரமும், மூன்றாவது முறை சிக்கினால் ஒரு லட்ச ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. நான்காவது முறையாக பிடிபட்டால், விற்பவரின் கடை உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களை பொறுத்தவரையில், அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும் போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அரசு தரப்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து