முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கவர்னருக்கு அகிலேஷ் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லக்னோ : உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கவர்னர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்துயுள்ளார்.  

உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பிரதான ஏதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மாநிலத்தின் கவர்னரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இந்த  சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

உத்திரபிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டார். ஆனால் தற்போது மாநிலத்தில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆகையால் ஆளுநர் மாநிலத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து