உலகக் கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சதம்

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      விளையாட்டு
rohit sharma century 2019 06 16

மான்செஸ்டர் : மான்செஸ்டரில் நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி சதம் அடித்தார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையேயான உலகக் கோப்பையின் 22 -வது லீக் ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.  அதன்படி இந்திய அணியின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இதனால் 34 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் விளையாடிய லோகுஷ் ராகுல் 69 பந்தில் அரைசதம் அடித்தார்.  அரைசதம் அடித்த ரோகித் சர்மா அதன் பின் தனது ஆட்டத்தில் மிகப்பெரிய அளவில் அதிரடியை காட்டவில்லை என்றாலும், சதத்தை நோக்கிச் சென்றார். இறுதியில் 85 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். இந்த உலகக்கோப்பையில் அவரது 2-வது சதம் இதுவாகும். லோகேஷ் ராகுல் 78 பந்தில் 57 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து