முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலத்தில் தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்த தினவிழா: தியாகியின் சிலைக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மாலையணிவித்து மரியாதை:

ஞாயிற்றுக்கிழமை, 16 ஜூன் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்த தினவிழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நினைவு இல்லத்தில் உள்ள தியாகியின் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த தியாகி விஸ்வநாததாஸ் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்சிடாமல் தன்னுடைய எழுச்சி மிகுந்த நாடகங்கள் மூலம் மக்களிடையே பெரும் புரட்சியை ஏற்படுத்தியதற்காக 29முறை சிறை சென்று பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளார்.மேலும் ஆங்கிலேயர்களை கடுமையாகச் சாடிடும் நாடகங்களை தைரியமுடன் அரங்கேற்றி வந்த அவர் நாடகமேடையிலே நாட்டிற்காக தனது இன்னுயிரை ஈந்ததினால் வீரத்தியாகி விஸ்வநாததாஸ் என்று மக்களால் இன்றும் அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார்.அவரது தியாகத்தை போற்றுகின்ற வகையில் திருமங்கலத்தில் அவர் வாழ்ந்த வீடு தற்போது நினைவில்லமாக மாற்றப்பட்டு மார்பளவு சிலையும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது.இத்தகைய பெருமைமிகு தியாகி விஸ்வநாததாஸின் 133வது பிறந்ததினவிழா நேற்று திருமங்கலம் நகரிலுள்ள அவரது நினைவில்லத்தில் நேற்று வெகுசிறப்புடன் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி நேற்று முன்னதினம் திருமங்கலம் நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழக அரசின் சார்பில் மரியாதை செய்திடும் நிகழ்ச்சி நேற்று வெகுசிறப்புடன் நடைபெற்றது.இந்த விழாவில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு தலைமையேற்று நினைவில்லத்தில் உள்ள தியாகி விஸ்வநாததாஸின் திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தமிழக அரசின் சார்பில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்த நினைவு இல்லத்தையும், தியாகியின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியையும் அமைச்சர்ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.அப்போது மதுரை மாவட்ட ஆட்சியர்(பொ)சாந்தகுமார்,சட்டமன்ற உறுப்பினர்கள் பெரியபுள்ளான்(எ)செல்லம், எஸ்.எஸ்.சரவணன்,வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த விழாவில் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல்,இலக்கிய அணிசெயலாளர் திருப்பதி,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன், திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,திருமங்கலம் நகர அவைத் தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சதீஸ்சண்முகம்,ஒன்றிய துணைச் செயலாளர் சுகுமார்,இணைச் செயலாளர் சுமதிசாமிநாதன்,கள்ளிக்குடி முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,அம்மா பேரவை செயலாளர் எஸ்.பி.எஸ்.ராஜா,கழக வழக்கறிஞர்கள் முத்துராஜா,வெங்கடேஸ்வரன்,வாசிமலை மற்றும் திருமங்கலம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ராமசாமி,திருமங்கலம் வட்டாட்சியர் தனலட்சுமி,திருமங்கலம் நகராட்சி ஆணையாளர் ஜெயராமராஜா,பொறியாளர் சக்திவேல்,சுகாதார அலுவலர் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து