லண்டன் மேயருக்கு எதிராக அதிபர் டிரம்ப் போர்க்கொடி

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      உலகம்
london mayor-trump 2019 06 17

லண்டன் : லண்டன் நகரில் தொடரும் வன்முறைகளுக்கு லண்டன் மேயர் சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது டுவிட்டர் பதிவில் சரமாரியாக சாடி உள்ளார். 
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியான சாதிக் கான் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் லண்டன் நகரில் தொடர்ந்து கத்திக்குத்து சம்பவங்கள், வீதி வன்முறைகள் அரங்கேறி வருகின்றன.

இதற்கு சாதிக்கானை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சரமாரியாக சாடி உள்ளார்.

இதையொட்டி அவர் டுவிட்டரில் பதிவிடுகையில், “லண்டனுக்கு புதிய மேயர் வேண்டும். சாதிக்கான் ஒரு அழிவு சக்தி. அவர் நீடித்தால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். அவர் தேசத்துக்கே அவமதிப்பு. அவர் லண்டன் நகரை அழித்து வருகிறார்” என குறிப்பிட்டு உள்ளார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து