முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டப்படி ஜூலை 3-ல் தொடங்கும் - தமிழக அரசு அறிவிப்பு

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கவுன்சிலிங் திட்டமிட்டபடி ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர்.கே.பிஅன்பழகன் அறிவித்துள்ளார்.

சான்றிதழ் சரிபார்ப்பு...

பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் கட்டமாக விண்ணப்பப்பதிவு மே 2-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து 2-வது கட்டமாக, 3-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஜூன் 7-ம் தேதி முதல்13-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 46 சான்றிதழ் சரிபார்ப்பு மையங்களில் நடைபெற்று முடிந்தது. அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது.

நேரடி கலந்தாய்வு....

இதன் தொடர்ச்சியாக 25ம் தேதி மாற்றுதிறனாளிகளுக்கான நேரடி கலந்தாய்வும், 26-ம் தேதி முன்னாள் இராணுவத்தினர் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை, தரமணியில் உள்ள மையப் பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள அரங்கில்நடைபெறும். அதேபோன்று தொழிற்பிரிவினருக்கு 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை அதே மையப் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற்கூட வளாகத்தில் நேரடி கலந்தாய்வு நடைபெற உள்ளது.

பொதுப் பிரிவு...

தரவரிசைப் பட்டியல் வெளியிட்ட பின்பாக, சிறப்புப் பிரிவைச் சார்ந்த மாணாக்கர்கள் எந்தெந்த தேதிகளில் கலந்தாய்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும் என்பதை தனித் தனியாக அவர்கள் விண்ணப்பப் பதிவின் போது பதிவு செய்தகைபேசி எண்ணில் குறுஞ் செய்தியும், அவர்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு தகவலும் அனுப்பி வைக்கப்படும். மேலும், ஜூலை 3ம் தேதி பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுவதில் எவ்வித மாற்றமும் இல்லை. இது தொடர்பாக மாணவர்களுக்கான சந்தேகம் ஏதேனும் இருப்பின், 044-22351014 மற்றும் 044-22351015 என்ற எண்ணிற்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை தொலைபேசியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எனஉ யர்க்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து