பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹிட்மேன் ரோகித் சர்மா சாதனை

திங்கட்கிழமை, 17 ஜூன் 2019      விளையாட்டு
Rohit Sharma 2019 06 17

மான்செஸ்டர் : உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோகித் சர்மா சதம் விளாசியதன மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

2-வது இந்திய வீரர்

இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து சிறப் பாக விளையாடி முத்திரை பதித்து வருகிறார். உலக கோப்பை போட்டி யில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் அவர் சதம் அடித்தார். 122 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் ரோகித் சர்மா சதம் அடித் தார். 140 ரன்கள் குவித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் சதம் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

84 பந்தில் சதம்...

கடந்த உலக கோப்பையில் டோனி பாகிஸ்தானுக்கு எதிராக செஞ்சூரி அடித்து இருந்தார். 209-வது ஒருநாள் போட்டியில் விளையாடும் ரோகித் சர்மாவுக்கு இது 24- வது சதமாகும். ரோகித் சர்மா 85 பந்தில் சதம் அடித்தார். இது அவரது 3-வது அதிவேக சதமாகும். கடந்த ஆண்டு அவர் இங்கிலாந்துகக்கு எதிராக 82 பந்தில் செஞ்சூரி அடித்ததே அதிவேகமாக இருக்கிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக 84 பந்தில் சதம் அடித்து இருந்தார். இங்கிலாந்து மைதானத்தில் ரோகித்தின் 4-வது சதமாகும். இதன் மூலம் அவர் தவான், ரிச்சார்சுடன் இணைந்தார்.

சச்சின் 3-வது இடம்...

ரோகித் சர்மா 3 சிக்சர்கள் அடித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டியில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையில் உள்ளார். அவர் டோனியை முந்தினார். ரோகித்சர்மா 358 சிக்சருடன் முதல் இடத்திலும், டோனி 355 சிக்சர்களுடன் 2-வது இடத்திலும், தெண்டுல்கர் 264 சிக்சர்களுடன் 3-வதுஇடத்திலும், யுவராஜ்சிங் 251 சிக்சர்களுடன் 4-வது இடத்திலும், கங்குலி 247 சிக்சருடன் 5-வது இடத்திலும், ஷேவாக் 243 சிக்சருடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து