சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 12 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      உலகம்
Earthquake in China 2019 06 18

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்தனர். 125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சீனாவின் தென்மேற்கு பகுதியில் சிச்சுவான் மாகாணம் அமைந்துள்ளது. இம்மாகாணத்தில் உள்ள இபின் நகரத்தில் நேற்று முன்தினம் இரவு 10.55 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானது. இதனால் பீதியடைந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டிடங்கள் சேதமடைந்தன. இதே பகுதியில் நேற்று காலை மீண்டும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டரில் 5.3 ஆக பதிவானது. அடுத்தடுத்து ஏற்பட்ட இரு சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீட்புப்பணியில் 300-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் தங்குவதற்காக தற்காலிகமாக ஐந்தாயிரம் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து