பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம் இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      உலகம்
Pakistan 2019 02 28

பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு புதிய தலைவர் நியமனம்
இஸ்லாமாபாத், பாகிஸ்தான் உளவு பிரிவான ஐ.எஸ்.ஐ. தலைவராக லெப்டினன்ட் ஜெனரல் பியாஸ் ஹமீது நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ மேஜர் ஜெனரலாக இருந்த ஹமீது கடந்த ஏப்ரலில் லெப்டினன்ட் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து தலைமையிடத்து துணை ஜெனரலாக அவர் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.யின் உள்நாட்டு பாதுகாப்பு தலைவராக பணிபுரிந்துள்ளார். மேலும் ராணுவ தலைமை ஜெனரல் குமார் பஜ்வாவிற்கு மிகவும் நெருக்கமானவர்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஆசிம் முனீர் திடீரென மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் பியாஷ் ஹமீது ஐ.எஸ்.ஐ. தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபரில் ஐ.எஸ்.ஐ. தலைவராக பதவியேற்ற நவீத் முக்தர் ஓய்வு பெற்றதையடுத்து தலைவராக ஆசிம் முனீர் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து