தந்தையின் இறுதி சடங்கின் போது 4 வயது மகனை அழுத படி தூக்கி செல்லும் சக காவலரின் செயல் வைரலாகிறது

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
army 4-year  son 2019 06 18

ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த காவலரின் இறுதிச் சடங்கின் போது அவரது 4 வயது சிறுவனை சக காவலர் அழுதபடி தூக்குச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தின் அனாந்னாங் மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். குழு மீது கடந்த புதன் கிழமை பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலில் 5 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். அர்ஷத் கான் எனும் காவலருக்கு இந்த தாக்குதலின் போது பலத்த காயம் ஏற்பட்டது. இவர் ஸ்ரீநகரைச் சேர்ந்தவர். மேலும் இவர் 2002-ம் ஆண்டு மாநிலத்தின் காவலராக தேர்வு செய்யப்பட்டார். கடைசியாக அவர் சதார் காவல் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரியாக இருந்தார். அர்ஷத் ஞாயிற்றுக் கிழமை, டெல்லியில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கின் போது அர்ஷத் கானின் 4 வயது மகன் உஹ்பான் உடனிருந்தான். அப்போது அங்கிருந்த மூத்த காவல் அதிகாரி ஒருவர், அந்த குழந்தையை அழுது கொண்டே தூக்கிச் சென்றார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. அர்ஷத் கானின் மகன் உஹ்பானை தூக்கிச் சென்றது துணை காவலர் ஹசீப் முகல் என்பது தெரிய வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து