உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியாவுக்கு 2-ம் இடம் ஆய்வில் தகவல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      இந்தியா
internet 2019 06 18

உலக அளவில் இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.  

உலகமே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாறி வரும் வேளையில், மேரி மீகர் எனும் நிறுவனம் இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இதில் உலகில் உள்ள மக்கள் தொகையில் பாதி பேர் இணையத்தின் மீது தீராத மோகத்தில் உள்ளனர் என தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியல்ல. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியே ஆகும் என தெரிய வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், போன் வந்தால் மட்டும் இலவசம் எனும் முறை இருந்தது.  

ஆனால், இன்று பெரும்பாலான தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு உள்நாட்டு, வெளிநாட்டு போன்களை குறைந்த கட்டணத்தில் வழங்கி வருகின்றன.
அதேபோல் அளவில்லா டேட்டாக்களை மிக குறைவான விலையில் வாரி வழங்கி வரும் தொழில்நுட்ப நிறுவனங்களால்தான் உலகிலேயே இணைய பயன்பாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது எனலாம்.

மேலும் இணைய பயன்பாட்டில் முதல் இடத்தை சீனா பெற்றுள்ளது. அதேபோல் ஒரு ஜிபி டேட்டாவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கும் நாடுகளில் ஜிம்பாவே முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து