முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதியில் நாவல் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      திண்டுக்கல்
Image Unavailable

நத்தம்,-  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதியில் மா, பலா, வாழை, பப்பாளி, கொய்யா, சப்போட்டா, சீத்தா, இலந்தை உள்ளிட்ட பல்வேறு பழ வகைகள் அந்தந்த மாத சீசனில் அறுவடையாகி பலனுக்கு வருவது வழக்கம். இந்நிலையில் மருத்துவக்குணம் நிறைந்த சர்க்கரை நோயாளிகள் விரும்பி சாப்பிடும் பழமானது நாவல் பழம். இந்த மரம் நத்தம் வட்டாரத்தில் வத்திபட்டி, பரளி, காசம்பட்டி, லிங்கவாடி, மலையூர், நத்தம், மணக்காட்டூர், புன்னப்பட்டி, மலைக்கேணி, செந்துறை, சிறுகுடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இந்த நாவல் மரங்கள் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடும் வறட்சியை தாங்கக் கூடிய இந்த நாவல் மரம் ஆண்டுதோறும் ஒரு முறை மட்டும் ஜுலை மாத கடைசியில் மகசூல் தரும். அதன்படி கடந்த மே மாதம் பூப்பூத்து இந்த மாதம் பிஞ்சு பிடித்து அடுத்த மாதம் பழம் பழுக்கும் நிலை ஏற்படும். இந்த வருடம் அவ்வப்போது பெய்த மழையின் ஈரத்தினால் நாவல் மரங்களில் பூக்கள் பூத்து, பிஞ்சுகள் பிடித்து செழிப்பாக காணப்படுகிறது. எப்போது இந்த நாவல் பழம் அறுவடைக்கு வரும் என்று அதை விரும்பிச் சாப்பிடும் நபர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். தற்போது ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில நாவல் பழங்களும் விற்பனைக்கு வந்துள்ளது. இருப்பினும் நமது பகுதியில் விளையும் நாட்டு நாவல் பழ சுவைக்கு அவை ஈடாகாது என்று நாவல் மர விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து