மகளிர் பைனல்ஸ் ஹாக்கி தொடர்: இந்திய அணி கோல் மழை; பிஜியை 11-0 என வீழ்த்தியது

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      விளையாட்டு
Indian Team 2019 06 18

Source: provided

ஹிரோஷிமா : ஜப்பானில் நடைபெற்று வரும் மகளிர் பைனல்ஸ் தொடரில் குர்ஜித் நான்கு கோல்கள் அடிக்க பிஜி-யை 11-0 என துவம்சம் செய்தது இந்தியா.

11 கோல்கள்...

பெண்களுக்கான பைனல்ஸ் தொடர் ஹாக்கி ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில் நடைபெற்று வருகிறது. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா, பிஜி அணியை எதிர்கொண்டது. கத்துக்குட்டி அணிக்கெதிராக இந்திய வீராங்கனைகள் அபாரமான விளையாடினர். இந்திய வீராங்கனைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததால், இந்தியாவிடம் 11-0 என படுதோல்வியடைந்தது பிஜி.

இந்திய வீராங்கனைகளில் குர்ஜித் நான்கு கோல்கள் அடித்தார். மோனி இரண்டு கோல்கள் அடித்தார். லால்ரேம்சியாமி, ராணி, வந்தனா கட்டாரியா, லாலிமா மின்ஸ், நவ்தீட் கவுர் தலா ஒரு கோல் அடித்தனர். சனிக்கிழமை இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து