முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோயிப் மாலிக் வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 18 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது. இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது.  இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது.  இதனையடுத்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக்கும்,  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் டுவிட்டரில் மோதிக் கொண்டனர்.  இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் மாலிக் கூறியதாவது:

வீரர்களின் சார்பில் ஊடகங்களிடம் கோரிக்கை ஒன்றை விடுக்கிறேன். ரசிகர்களும், மக்களும் எங்கள் குடும்பத்தினருக்கு உரிய மரியாதையையும், கண்ணியத்தையும் அளியுங்கள். மரியாதை குறைவான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். யாரையும் மோசமாக நடத்தக் கூடாது. அது சரியானதும் அல்ல. இப்போது ரசிகர்கள் பேசுவதை கேட்டும், என்னுடைய சொந்த வாழ்க்கை தொடர்பாக நான் விளக்கம் தருவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

_________________________

பாக். வீரர்களை திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!

உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது, மோசமான ஃபீல்டிங், பேட்டிங்கில் ஏமாற்றம் என பாகிஸ்தான் அனைத்திலும் சொதப்பியது. பாகிஸ்தான் அணியின் பொறுப்பற்ற விளையாட்டே தோல்விக்குக் காரணம் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்திய அணி உடனான போட்டிக்கு முன் சோகிப் மாலிக், சானியா மிர்சா உடன் இணைந்து பாகிஸ்தான் வீரர்கள் வாகப் ரியஷ், இமாம்-உல்-ஹக் ஆகியோர் இரவு பார்டிக்கு சென்றதாக வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மான்செஸ்டரில் உள்ள பிரபல விடுதியில் பாகிஸ்தான் வீரர்களை பார்த்ததாக அந்தநாட்டு ரசிகர்களும் தெரிவித்துள்ளனர். சானியா மிர்சாவுடன் பார்டிக்கு வந்த சோகிப் மாலிக் ஹூக்கா(Hookah) புகைத்ததை பார்த்தாக ரசிகர் ஒருவர் கூறியுள்ளார். மேலும், பாகிஸ்தான் வீரர்கள் பீட்சா, பர்கர் போன்ற உணவை எடுத்துகொண்டாக கூறினார். இந்தப் பார்டி இரவு 2 மணி வரை நடந்தாக ரசிகர்கள் பலர் இணயைத்தில் பதிவிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் செய்தியாளர் ஒருவர் அங்கீகரிக்கப்பட்ட தனது ட்விட்டர் பக்கத்தில் பாகிஸ்தான் வீரர்கள் பார்டியில் கலந்து கொண்டது வெட்கடப்பட வேண்டிய செயல் என்று கடுமையாக சாடியுள்ளார்.
____________

துப்பாக்கி சூடு- 4 பேர் காயம்

கனடாவின் டொரன்டோ நகரைச் சேர்ந்த கூடைப்பந்து அணி, என்பிஏ சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோல்டன் ஸ்டேட் வாரியர்ஸ் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். இதனால் டொரன்டோ நகரில் எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் அணிவகுத்து சென்றனர்.   இந்நிலையில், நாதன் பிலிப்ஸ் சதுக்கம் அருகே உள்ள பே அண்ட் ஆல்பர்ட் தெருக்களில் வெற்றிக் கொண்டாட்டத்திற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். அப்போது இரண்டு தெருக்களிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது சிலர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில், 4 பேர் காயமடைந்தனர்.  இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். மோதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தபோது, அருகில் உள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் கூடைப்பந்து அணிக்கு நடந்த பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கனடா பிரதமர் ஜஸ்டின் டூரூடோ கலந்துகொண்டார். துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
____________

பாக். ரசிகருக்கு ஆறுதல் கூறிய நடிகர் ரன்வீர் சிங் !

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை மான்செஸ்டரில் நடைபெற்றது. இதில் டக்வொர்த் லிவிஸ் விதிப்படி இந்தியா 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி பாகிஸ்தானை தொடர்ச்சியாக ஏழுமுறை வீழ்த்தி சாதனை படைத்தது.

இந்த போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்ததை அடுத்து போட்டியினை காணவந்த அந்நாட்டு ரசிகர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் தோல்வியினை ஏற்றுக்கொள்ள முடியாத அந்நாட்டு ரசிகர் ஒருவருக்கு போட்டியினை காணவந்த இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆறுதல் கூறிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் பாகிஸ்தான் ரசிகரை கட்டி அணைத்து, “உங்கள் நாட்டு அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடினர். அவர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடனும், மிக நுட்பமாகவும் விளையாடினர். ஆகையால் நம்பிக்கையினை இழக்க வேண்டாம் எப்போதுமே இரண்டாவது வாய்ப்பு உள்ளது” என ரன்வீர் சிங் ஆறுதல் கூறுகிறார்.
____________

வங்காள தேச கேப்டன் புகழாரம்

உலகக்கோப்பை போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 322 ரன் இலக்கை எடுத்து வங்காளதேசம் அதிர்ச்சி கொடுத்தது. இதில் வெற்றியும் பெற்றது. வங்காளதேசம் பெற்ற 2-வது வெற்றியாகும். வெற்றி குறித்து அந்த அணியின் கேப்டன் மோர்தாசா கூறியதாவது:- முஷ்டாபிஜூர் ரகுமான் ஒரே ஒவரில் 2 விக்கெட் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்புமுனை. இதனால்தான் வெஸ்ட்இண்டீஸின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

ஷாகிப் ஹசன் எங்கள் பேட்டிங்கில் முக்கியத்துவம் பெற்றவர். ஒவ்வொரு ஆட்டத்திலும் அவர் ரன்களை குவித்து வருகிறார். அவருக்கு பக்கபலமாக லிட்டோன் தாஸ் விளையாடினார். ஷாகிப் அல் ஹசன் ஒரு அபூர்வமான வீரர். அவரைப்போல மற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
____________

களத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொண்டேன் - விஜய் சங்கர்

போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு விளையாடியதாலேயே அணிக்கு சிறப்பான பங்களிப்பை தர முடிந்தது என இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடிய அவர், தான் வீசிய முதல் பந்திலேயே பாகிஸ்தான் அணியின் விக்கெட்டை வீழ்த்தினார்.

மேலும், பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுவின் விக்கெட்டையும் கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவினார். இந்நிலையில் இப்போட்டி குறித்து தெரிவித்த விஜய் சங்கர், பந்துவீச தான் முன்கூட்டியே அழைக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமாக இருந்தது என்றார். களச் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை உடனடியாக தயார்படுத்திக்கொண்டதாலேயே தன்னால் சிறப்பாக செயல்படமுடிந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
___

ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் கைது

பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மைக்கேல் பிளாட்டினி (வயது 63) ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010-ல் பிபா-வால் நடத்தப்பட்டது.
அப்போது தனது பதவியை பயன்படுத்தி 2022-ல் கத்தார் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெறுவற்காக மறைமுகமாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி இன்று பிரான்ஸில் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.
___________

பாக். நடிகைக்கு பதிலடி கொடுத்த சானியா மிர்சா

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைப்பெறுகிறது. இந்த போட்டியில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று மான்செஸ்டரில் இந்தியா-பாகிஸ்தான் அணி மோதியது. இதில் 7வது முறையாக பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோற்றது.  இந்த தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின்  முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதில் போட்டிக்கு முதல்நாள் இரவு பாகிஸ்தான் வீரர்கள் ஆகியோர் பீட்சா, பர்க்கர் சாப்பிட்டதால்தான் இப்படி ஆனது என தகவல் புகைப்படத்துடன் வெளியானது. இதில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவும் இருப்பதுபோல் வெளியானது. இது குறித்து பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சானியா, நான் உங்கள் குழந்தையை நினைத்து உண்மையில் வருந்துகிறேன். உங்கள் குழந்தையை ஷிசா பேலஸ் போன்ற துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் சென்று இருக்கிறீர்களே. எனக்கு தெரிந்தவரை சிறுவர்கள், குழந்தைகள், விளையாட்டு வீரர்களுக்கு துரித உணவுகள் கொடுப்பது தீங்கானது. உங்களுக்கும் தெரிந்திருக்கும்’ என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சானியா மிர்சா தனது டுவிட்டர் பக்கத்தில், ‘நான் என் குழந்தையை துரித உணவுகள் கடைக்கு அழைத்துச் செல்லவில்லை. இவ்வாறு அழைத்துச் செல்வது உங்களுக்கு தெரிந்த, உலகில் உள்ள மற்றவர்களின் பணியாகத்தான் இருக்கும். மற்றவர்களை காட்டிலும் என் மகனை நான் கவனமாக பராமரித்து வருகிறேன். மேலும் நான் பாகிஸ்தான் அணியின் டயட்டீஷியன் அல்ல. அவர்களுக்கு நான் தாயோ, ஆசிரியரோ அல்ல என்பதை உணருங்கள்.  அவர்கள் எப்போது விழிப்பார்கள், சாப்பிடுவார்கள், தூங்குவார்கள் என தெரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என் மீது நீங்கள் வைத்துள்ள அக்கறைக்கு நன்றி’ என கூறியுள்ளார்.
____________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து