முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தண்ணீா் பிரச்சனையை வைத்து அரசியல் நடத்துகிறது தி.மு.க - தமிழிசை குற்றச்சாட்டு

புதன்கிழமை, 19 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தங்களது ஆட்சியில் தொலைநோக்கு திட்டங்கள் எதையும் மேற்கொள்ளாமல் வறட்சியை எதிர்ப்பார்த்து அரசியல் நடத்துவதாக தி.மு.க. மீது தமிழிசை சவுந்திரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை விமானநிலையத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போதுஅவர் கூறியதாவது:-

தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போர்க்கால அடிப்படையில் தீர்க்க வேண்டும். ஆனால் அதேசமயத்தில் எதிர்க்கட்சிகள் ஏதோ குறை சொல்வதே கடமையாக நினைத்துக் கொண்டிருக்கின்றன. பலமுறை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க.வினர் தொலைநோக்கு திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. மக்களின் தாகம் தீர்க்கப்படவில்லை. எனவே தான் தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின்கட்கரி, கோதாவரி, காவிரி திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் 40 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு குறைந்திருக்கிறது. ஆனால் இதுகுறித்து விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு தார்மீக உரிமையில்லை. இந்த சூழ்நிலை வரும் என்று ஏற்கனவே தெரிந்திருந்த எதிர்க்கட்சிகள், எந்த தொலைநோக்கு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. வறட்சியை எதிர்பார்த்து அரசியல் செய்துகொண்டிருக்கின்றன எதிர்க்கட்சிகள். என்று அவர் குற்றம்சாட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து