முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட்: புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது இங்கிலாந்து அணி !

புதன்கிழமை, 19 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

மான்செஸ்டர் : மோர்கனின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. மான்செஸ்டரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்வு செய்தது.

148 ரன்கள்...

பேர்ஸ்டோ 90 ரன்களும், ஜோ ரூட் 88 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.மோர்கன் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளுக்கு பந்துகளை விரட்டினார். 71 பந்துகளில் 17 சிக்சர்கள், 4 பவுண்டரிகளுடன் அவர் 148 ரன்களை விளாசினார். 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது. தொடர்ந்து ஆடிய ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் குறைந்த ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். எதிரணியின் பந்துகளை சமாளித்த ஹஷ்மத்துல்லா 76 ரன்கள் எடுத்தார்.

முதலிடத்திற்கு...

ஆப்கானிஸ்தான் அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற அந்த அணி புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து