முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டியில் புதிய வரலாறு: ஆறு ரன்களுக்கு ஆல் அவுட் ; 9 பேர் ரன் எடுக்காமல் அவுட்

புதன்கிழமை, 19 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

மாலி : இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் புதிய வரலாறாக வெறும் 6 ரன்களுக்கு மொத்த அணியும் அவுட்டான அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்தேறி உள்ளது.

டி-20 போட்டி...

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள சின்ன நாடான மாலியில் நேற்று  20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. மாலி பெண்கள் அணியும், ருவாண்டா பெண்கள் அணியும் இந்த டி-20 போட்டியில் மோதிக்கொண்டன. இந்த போட்டி தொடக்கத்தில் இருந்தே மிகவும் வித்தியாசமாக சென்றது. மாலி அணியின் தொடக்க வீராங்கனை மரியம் சமாங்கே மட்டும் அந்த அணியில் ஒரு ரன் எடுத்து அவுட்டானார்.

6 ரன்கள்தான்...

அதன்பின் களமிறங்கிய மாலி அணி வீராங்கனைகள் எல்லோரும் வரிசையாக அவுட்டாகி பெவிலியன் திரும்பினார்கள். 9.4 ஓவரில் அந்த அணி மொத்தமாக அவுட்டானது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த அணி மொத்தமாக எடுத்ததே 6 ரன்கள்தான். அதிலும் அந்த அணியில் இருந்து வீராங்கனைகள் 9 பேர் டக் அவுட்டானார்கள். ஒரே ஒரு ரன் மட்டும்தான் ஓடி எடுக்கப்பட்டது. மீதம் உள்ள ரன்கள் எல்லாம் வைட் மூலம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மோசமான சாதனை...

இதை எளிதாக ருவாண்டா அணி அடித்து வென்றது. இதன் மூலம் ஐசிசி டி20 பெண்கள் போட்டியில் மாலி அணி புதிய மோசமான சாதனை படைத்து இருக்கிறது. ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக சீனா எடுத்திருந்த 14 ரன்கள் ஸ்கோர்தான் மிக குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து