பா.ஜ.க.வில் இணையவுள்ள 4 தெலுங்குதேச எம்.பி.க்கள் - சந்திரபாபுவுக்கு புதிய தலைவலி

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      இந்தியா
Chandrababu Naidu 2019 03 28

ஐதராபாத் : தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த 4 மாநிலங்களவை எம்.பி.க்கள் பாரதீய ஜனதாவில் சேர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது. பாராளுமன்ற தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்குதேசம் வென்றது. தற்போது சந்திரபாபு நாயுடு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருடைய கட்சியை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்கள் 4 பேர் பாரதீய ஜனதாவில் இணைய உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மாநிலங்களவையில் இப்போது தெலுங்கு தேசம் கட்சிக்கு 6 எம்.பி.க்கள் உள்ளனர். அதில் 4 எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைய உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசிய எம்.பி.க்கள் தங்களுடைய விருப்பத்தை தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போன்று தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரகசிய கூட்டத்தை நடத்தியுள்ளனர் என்றும், அவர்கள் மொத்தமாக கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து