முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரியில் மா விழா கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தேனி
Image Unavailable

தேனி - தேனி மாவட்டம், பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நேற்று மா விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்  முனைவர் ஆறுமுகம் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக விரிவாக்க கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் ஜவகர்லால், பெங்களுரு அகில இந்திய ஒருங்கிணைந்த பழங்கள் ஆராய்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்பாட்டீல் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் குமார் பேசும்போது, தோட்டக்கலை கல்லூரிகளில் மேற்கொள்கின்ற ஆராய்ச்சிகளை விவசாயிகள், மாணவர்கள்  என அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் பழக்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இதில் முக்கனிகளான மா, பலா, வாழை குறித்து கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்டையில், கடந்த வாரம் திருச்சியில் பலா குறித்து பழக்கண்காட்சி நடைபெற்றது. இன்று பெரியகுளத்தில் மா விழா நடைபெறுகின்றன. இந்த விழாவில் வேளாண் விஞ்ஞானிகள் மேற்கொள்கின்ற ஆராய்ச்சிகள் குறித்த கருத்துரைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. முந்தைய பருவம், நடுப்பருவம், பிந்தய பருவம் ஆகிய பருவ நிலைகளில் விவசாயிகள் எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகள் குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.
வருடம் முழுவதும் நுகர்வோருக்கு மா கிடைத்திடும் வகையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போதைய நிலையில் 1 ஏக்கருக்கு 1 முதல் 2 டன் வரை மா விளைச்சல் உள்ளது. புதிய தொழில்நுட்பமான உயர் அடர் நடவு திட்டத்தில்  மா விளைச்சல் சுமார் 6 டன் அளவிற்கு இருக்கும். விவசாயிகளின் வருமானம் மூன்று மடங்காக பெருகும் என சிறப்புரையாற்றினார். பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பழ அறிவியல் துறை தலைவர் முனைவர் ராஜாங்கம் நன்றி கூறினார். முன்னதாக இவ்விழாவை முன்னிட்டு சுமார் 350 வகையான மா ரகங்கள் கண்காட்சி நடைபெற்றது. இவ்விழாவில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கல்லூரி மாணவ மாணவிகள், விவசாயிகள், கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து