முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த விருதுநகர் தொகுதி அமமுக நிர்வாகிகள்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      விருதுநகர்
Image Unavailable

சிவகாசி. - விருதுநகரைச் சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
 
 விருதுநகர் மாவட்டத்தில்   அம்மா மக்கள் முன்னேற்ற கழக கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பத்தமிழன்  உட்பட நூற்றுக்கணக்கான நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி பால்வளத்துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று விருதுநகர் தொகுதியை சேர்ந்த ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் அமைச்சர் கே.டி .ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் விருதுநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாதவன், விருது மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் பாலகணேஷ், இணைச்செயலாளர் குரு கணேஷ், இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் பிரியா, மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் தங்கவேல், மாவட்ட மகளிரணி தலைவர் நாகம்மாள், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் ரோஸ்மின், மாவட்ட மீணவரணி துணை தலைவர் பாலமுருகன், மாவட்ட இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர் போதும் பொண்ணு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைத் தலைவர் சுப்பிரமணி ,விருதுநகர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர்கள் ஷாஜகான், கனேஷ் குமார், ஒன்றிய துணைச் தலைவர் கார்த்தி ஒன்றிய இளைஞரணி தலைவர் அருண் குமார் இளைஞர் பாசறை ஒன்றிய துணைத்தலைவர் விக்னேஷ் மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் நடராஜன் உட்பட ஏராளமான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அக்கட்சி இருந்து விலகி அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து