முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியகுளம் கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தகால் நடும் விழா

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தேனி
Image Unavailable

தேனி- தேனி மாவட்டம், பெரியகுளம்  கௌமாரியம்மன் திருக்கோவில் ஆனிப் பெருந்திருவிழா ஒவ்வொரு ஆண்டும்  வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்தாண்டு இத்திருவிழாவை முன்னிட்டு  முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. முகூர்த்த காலுக்கு பொட்டு வைத்து தீபாராதனை காண்பித்து, முகூர்த்தகாலை பக்தர்கள் புடைசூழ நகர்வலம் கொண்டு வரப்பட்டு கோவில் முன்பாக நடப்பட்டது.  முகூர்த்தக்கால் நடும் விழா முடிந்தவுடன் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. வரும் ஜுலை 2ம் தேதி சாட்டுதல் மற்றும் கம்பம் நடும் விழாவும், 8ம் தேதியன்று கொடியேற்றமும், 16ம் தேதியன்று மாவிளக்கு எடுத்தல் மற்றும் ரத உற்சவமும், 17ம் தேதி அக்னிச்சட்டி எடுத்தல் 23ம் தேதியன்று மறுபூஜை மற்றும் பாலாபிஷேகம் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர்  செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து