வர்த்தகர்கள் ஆண்டு படிவங்களை தாக்கல் செய்ய காலக் கெடுவை நீட்டிக்க வேண்டும் - மத்திய நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ரத்தினவேல் தகவல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தமிழகம்
rathinavel inform traders 2019 06 20

மதுரை : வர்த்தகர்கள் ஆண்டு படிவங்களை (ரிட்டன்ஸ்) தாக்கல் செய்ய காலக் கெடுவை நீட்டிக் வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மாலா சீதாராமனிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக  தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் மத்திய ஜி.எஸ்.டி. கமிஷனர் அலுவலம் சார்பில் நடந்த ஜி.எஸ்.டி விளக்க கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல் தெரிவித்தார்.

மத்திய ஜி.எஸ்.டி. இணை கமிஷனர் பி. பாண்டி ராஜா கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது.,

ஜி.எஸ்.டி. தொடர்பாக வர்த்தகர்களுக்கு மட்டும் அல்லாமல்  கலால்துறை அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் பொது மக்களுக்கும் இது குறித்த விளக்க கூட்டம் நடத்த உதவும்படி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினரிடம் கோரினோம் அதன்படி இக்கூட்டம் நடத்தப்படுகிறது. சில வர்த்தகர்கள் ஒரே "இ-வே" பில்லை பயன்படுத்தி பலமுறை பொருட்களை கொண்டு செல்வதை தடுக்க "இ - வே  - டிராக்கிங்" முறை அமல்படுத்தப்பட உள்ளது.

பதிவு தேவை இல்லை...

ஜி.எஸ்.டி.யை அமல்படுத்திய பின் தணிக்கையாளர்களுக்கு பொறுப்பு அதிகமாகிவிட்டது. ஆண்டுக்கு ரூ. 2 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் தணிக்கையாளர்களிடம் சான்று பெற்று ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த ஏப்ரல் 1 முதல் ரூ. 40 லட்சத்திற்கு கீழ வர்த்தகம் செய்பவர்கள் தங்கள் நிறுவனத்திற்கு பதிவு தேவை இல்லை, ரத்து செய்து கொள்ளலாம். போலி "இன்வாய்ஸ்"கள் தொடர்பாக சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ. 3 கோடிக்கு மேல் வருமானம் உள்ள ஒரு பிரபல ஓட்டல் ஒன்று  இதுவரை வருமானம் வரியே கட்டவிலை. "பான் எண்" கூட இல்லை. எங்கள் அலுவலகம் சார்பில் தனி "வெப்சைட்"  துவங்கி உள்ளோம். வர்த்தகர்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என பேசினார்.

அரசுக்கு வருவாய்...

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் என். ஜெகதீசன் பேசியதாவது,

ஜி.எஸ்.டியை அமல்படுத்தியபோது இந்தியாவிலேயே முதன் முதலில் வரவேற்றது. தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தான். மதிப்பு கூட்டுவரி (வாட்) அமலில் இருந்தபோது சராசரியாக 26.5 சதவீதமாக இருந்த வரி தற்போது ஜி.எஸ்.டி அமல்படுத்திய பிறகு சராசரியாக 18 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் ரூ.1 கோடியே 13 ஆயிரத்து 865 வரி வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. இதனால் பொருட்களுக்கான வரியை அரசு குறைத்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் பொருட்களுக்கு அதிகபட்ச வரி  18 சதவீதமாக இருக்க வேண்டும் என்பதே வர்த்தக சங்கத்தின் கோரிக்கை என பேசினார்.

சுற்றறிக்கை...

வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேல் பேசியதாவது,

வர்த்தகர்கள் ஆண்டு படிவங்கள் (ரிட்டர்ன்) தாக்கல் செய்வதற்கான காலக் கெடுவை நீட்டிக் வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தா ராமனிடம் நேரில் கோரிக்கை விடுக்க உள்ளோம். நேர்மையாக வணிகர்கள் எக்காரணம் கொண்டும் பாதிக்க கூடாது என்ற அடிப்படையில் தமிழக அரசு வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை விட்டுள்ளது என பேசினார்.

கூட்டத்தில் தணிக்கையாளர்கள் ஜி.சரவணகுமார், கே. பாலசுப்ரமணியன் ஆகியோர் வர்த்தகர்கள், பொது மக்கள் ஜி.எஸ்.டி தொடர்பான சமீபத்திய மாறுதல்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு விளக்கமளித்தனர்.  வர்த்தக சங்க செயலாலர் ஜே. செல்வம் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து