முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசிடம் இருந்து தண்ணீரை வாங்க தமிழக அரசு மறுத்துவிட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

வியாழக்கிழமை, 20 ஜூன் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : கேரள அரசு வழங்கும் தண்ணீரை தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் மறுத்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆலோசனைக்கு பின்...

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் ட்விட்டர் பதிவு வருமாறு:-

கேரள முதல்வரின் செயலாளர், தமிழக முதல்வரின் செயலாளரிடம் தமிழகத்திற்கு இரயில் மூலம் ஒருமுறை 20 வேகன்களில் தண்ணீர் அனுப்பலாமா என கேட்டார். அந்தநேரத்தில் முதல்வர் எடப்பாடி மருத்துவ பரிசோதனைக்கு சென்றிருப்பதால் தமிழக முதல்வரின் செயலாளர் உள்ளாட்சித் துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளரிடம் கலந்தாலோசனை செய்து, தகுந்த ஆலோசனைக்கு பிறகு கேரள முதல்வரின் செயலாளரிடம், கேரள அரசு தண்ணீர் தர முன்வந்ததற்கு முதற்கண் தமிழக மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

முதல்வர் முடிவு...

சென்னையின்  ஒருநாள் குறைந்தபட்சி தேவை 525 எம்.எல்.டி. தற்போது கேரளாவில் இருந்து இரயில்வே வேகன்கள் மூலம் அனுப்பப்படும் 20 லட்சம் லிட்டம் நீரினை (2 எம்.எல்.டி) இங்கேயே சமாளித்து வருகிறோம் என்றும், தேவை ஏற்படின் கண்டிப்பாக கேரள அரசை நாடுவதாக தெரிவித்தார். கேரள அரசு தினமும் 2 எம்.எல்.டி தண்ணீர் அனுப்பினால் உதவியாக இருக்கும் என்று தமிழக அரசு அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பாக நாளை (இன்று) நடைபெற உள்ள குடிநீர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் உரிய முடிவை அறிவிப்பார்கள்.

உண்மையில்லை...

இதற்கிடையே கேரள அரசு வழங்கும் தண்ணீரை தமிழக முதல்வர், கேரள முதல்வரிடம் மறுத்துவிட்டதாக வந்த தகவல் உண்மையில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து