இந்தியர்களுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலனை செய்யும் அமெரிக்கா

இந்தியர்களுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு எச்.1-பி விசா வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவே அதிகளவு எச்.1-பி விசா பெற்றுள்ளது. தற்போது எந்த நாட்டுக்கும் குறிப்பிட்ட இலக்கான ஆண்டுக்கு 85 ஆயிரம் விசாக்கள் வழங்கப்படுவதில்லை. வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் தகவல்களை (டேட்டா) உள்ளூரிலேயே சேமித்து வைக்க வேண்டும் என்று வற்புறுத்தும் நாடுகளுக்கு எச்.1-பி விசா வழங்குவதை கட்டுப்படுத்த பரிசீலிப்பதாக அமெரிக்க அரசு அறிவித்தது. இந்த புதிய விதிகள் குறித்து அமெரிக்க அரசுக்கு இந்தியா தனது கடும் வேதனையை தெரிவித்துள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இறக்குமதி பொருட்கள் மீதான வரி விதிப்பை ஏட்டிக்கு போட்டியாக உயர்த்தியதால் ஏற்பட்டுள்ள வர்த்தக சிக்கலை தொடர்ந்து எச்.1.பி விசாவை கட்டுப்படுத்தும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.