முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும்: ராகுல் காந்தி மீது பா.ஜ.க. மறைமுக தாக்கு

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம், சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும் என ராகுல்காந்தியை பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் மறைமுகமாக சாடியுள்ளார்.

சர்வதேச யோகா தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் ராம் மாதவ் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது கவனிப்பது கடினம். அதே போல் தேர்வின் போது பாடப் புத்தகத்தின் மீது கவனம் செலுத்துவது கடினம். பள்ளிகளில் குழந்தைகள் இருப்பதைப் போல, பாராளுமன்றத்திலும் சிலர் உள்ளனர். ஜனாதிபதி உரையாற்றுவதை கூட கவனிக்காமல் செல்போனில் கேம் விளையாடுகின்றனர். இத்தகைய சிறுபிள்ளைத்தனமான பிடிவாதத்தை குறைக்க யோகா உதவும் என்று அவர் கூறினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து