முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம்

வெள்ளிக்கிழமை, 21 ஜூன் 2019      விருதுநகர்
Image Unavailable

  சிவகாசி, -;  சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரமோற்சவ தேரோட்டம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட எஸ்பி ராசராசன், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தனர்.
 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பழைமையான வைணவத்திருத்தலம். திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயிலாகும். இக்கோயிலில் ஆனி பிரம்மோத்ஸவ விழா, ஜூன் 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி மாலை ஆன்மீகச்சொற்பொழிவு, பஜனைகள் நடைபெற்றன.  கடந்த 9 நாட்களாக நடந்து வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்றுகாலை நடந்தது. முன்னதாக தேரில் நின்றநாராயணப்பெருமாள் செங்கமலத்தாயாருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். சிறப்பு பூஜைகளும் நடந்தது. பின்னர் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தேரோட்ட நிகழ்ச்சியில் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினா் ராஜவர்மன். மாவட்ட எஸ்பி ராசராசன், ஆண்டாள் கோயில் தக்கார் ரவிச்சந்திரன், அதிமுக ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், ஜெ,பேரவை நகர செயலாளார் ரமணா, முன்னாள் யூனியன் தலைவர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், திருத்தங்கல் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சேதுராமன்,  உட்பட பலா்கலந்து கொண்டனர்.  தேரோட்டத்தையொட்டி சிவகாசி, திருத்தங்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமிகள் எழுந்தருளிய தேரை வடம் பிடித்து இழுத்தனர். திருவிழா ஏற்பாடுகளை கோயி்ல் நிர்வாகிகள் செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து