முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான் மீதான தாக்குதலை கடைசி நிமிடத்தில் கைவிட காரணம் என்ன? அதிபர் டிரம்ப் விளக்கம்

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : ஈரான் மீது தாக்குதல் நடத்த ராணுவத்திற்கு உத்தரவிட்டு, கடைசி நிமிடத்தில் தாக்குதலை கைவிட காரணம் என்ன என்பதை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.  ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரானின் பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.

இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரிக்கும் விதமாக தனது டுவிட்டரில், ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது என பதிவிட்டிருந்தார். ஈரான் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் தாக்குதல் நடத்த உத்தரவிட்டு அதனை கடைசி நிமிடத்தில் கைவிட்டதாக வெளிவந்த செய்தி இரு நாடுகளிடையே போர் பதற்றத்தை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில் ஈரான் மீதான தாக்குதலை நிறுத்த காரணம் என்ன என்பதை டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஈரான் அமெரிக்காவில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதையடுத்து நாங்கள் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டம் போட்டோம். அதன் பின்னர் ராணுவ உயர் அதிகாரியிடம் இதில் எத்தனை மக்கள் இறப்பார்கள் என கேட்டேன். அதற்கு அவர் இதில் 150 பேர் பலியாவார்கள் என கூறினார். இதன் பின்னர் தாக்குதல் நடத்த 10 நிமிடங்களே இருந்த நிலையில், உடனடியாக நிறுத்த உத்தரவிட்டேன். இந்த விவகாரத்தில் நான் அவசரப்படப் போவதில்லை. ஏனென்றால் எங்கள் ராணுவம்தான் உலகிலேயே தலைச் சிறந்த ராணுவம். ஈரான், அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிராகவோ அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து