முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

30.9 சதவீத ஓட்டுகளை பெற்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நபராக மோடி தேர்வு

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

லண்டன் : லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை நடத்திய கருத்துக்கணிப்பில் 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து செயல்பட்டு வரும் பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகை 2019-ம் ஆண்டில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபர் யார்? என வாசகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது. இதற்காக உலகின் 25 நாட்டை சேர்ந்த தலைவர்களின் பெயர்கள் இந்த போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. இறுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ர‌ஷ்ய அதிபர் புடின், அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் இறுதிக்கட்ட போட்டிக்கு தேர்வானார்கள். இதற்கான ஓட்டெடுப்பு 15-ம் தேதி நள்ளிரவில் நிறைவடைந்தது. நிறைவாக 30.9 சதவீத ஓட்டுகளை பெற்று நரேந்திர மோடி உலகின் மிகவும் சக்திவாய்ந்த நபராக தேர்வு செய்யப்பட்டார். 29.9 சதவீத ஓட்டுகளை பெற்று புடின் 2-வது இடத்தையும், 21.9 சதவீத ஓட்டுகளை பெற்று டிரம்ப் 3-வது இடத்தையும், 18.1 சதவீத ஓட்டுகளை பெற்ற ஜின்பிங் 4-வது இடத்தையும் பிடித்தனர். இதையடுத்து பிரிட்டி‌‌ஷ் ஹெரால்டு பத்திரிகையின் ஜூலை 15-ம் தேதி இதழ் அட்டைப்பக்கத்தில் மோடியின் படம் இடம்பெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து