முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய தலைவர் நியமனம் : முதல்வர் ஜெகன்மோகன் அறிவிப்பு

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

அமராவதி : திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவரை நியமித்துள்ளதாக ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பொறுப்பேற்றதில் இருந்து அதிரடியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் முதல் கோப்பாக சுகாதாரத்துறையில் பணிப்புரியும் ஆஷா பணியாளர்களின் ஊதியத்தினை ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தினார். விவசாயிகளுக்காக ரையத் பரோசா எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் ஆண்டிற்கு ரூ.12,500 சலுகை பெறுவார்கள் என அறிவித்தார். இதனையடுத்து 5 துணை முதல்வர்களை நாட்டிலேயே முதன்முறையாக நியமித்தார். 25 கேபினட் அமைச்சர்களையும் நியமனம் செய்தார். அடுத்த அதிரடியாக, வரும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வரும் என அறிவித்தார். ஆந்திர காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை வழங்கப்படும் என உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் உலக புகழ்மிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்துள்ளார். இவர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினரும் ஆவார். இது குறித்த கோப்பை ஜெகன் மோகன் ரெட்டி, சிறப்பு தலைமை செயலாளர் மன்மோகன் சிங்கிடம் ஒப்படைத்தார். இதன்படி நேற்று முதல் சுப்பா ரெட்டி திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவி அமைச்சரவை தரவரிசையில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட பதவி ஆகும். மேலும் ஆந்திராவில் இந்த பதவி மிகுந்த மதிப்புமிக்க ஒன்றாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து