முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி - 20: ஜப்பான் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : ஜப்பானின் உசாகா நகரில் வருகிற 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-20 அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, சீனா, கனடா, ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினராக கொண்டுள்ள ஜி-20 அமைப்பின் மாநாடு ஜப்பானின் உசாகா நகரில் வருகிற 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் செல்கிறார். இந்த மாநாட்டின் போது பல்வேறு நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் மாநாட்டையொட்டி நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கேற்பதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியுள்ளார். பிரதமர் மோடி 6-வது முறையாக ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து