முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யோகாவுக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது- பினராயி

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

உடலை வலுவாக்க உதவுவதால் யோகாவுக்கும் மதத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் பேசியுள்ளார். 

 சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு   நாடு முழுவதும் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

திருவனந்தபுரத்தில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் சதாசிவம் தலைமையில் யோகாசன பயிற்சிகள் நடைபெற்றது. அதே போல திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில் கேரள முதல்- மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார். கேரளாவில் யோகா சனத்தை பரப்ப மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. யோகாசனத்தை மதத்துடன் தொடர்புபடுத்த முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இது மிகவும் தவறானது. யோகா சனத்துக்கும் மதத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. யோகாசனத்தை மதத்துடன் தொடர்புபடுத்த கூடாது.

யோகாசனம் நமது உடலை வலுவாக்குகிறது. பல்வேறு நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றுகிறது. உடல் நலனை மட்டுமல்ல மன நலனை பாதுகாக்கவும் யோகாசனம் உதவுகிறது. நோயில்லாமல் வாழ நாம் தினமும் யோகாசனம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும். தினமும் யோகாசனம் செய்வது நமது உடலுக்கு மிகவும் நல்லது.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து