முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜ.க ஏற்காது: எடியூரப்பா

சனிக்கிழமை, 22 ஜூன் 2019      இந்தியா
Image Unavailable

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வருவதை பா.ஜனதா ஏற்காது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.  

கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வரும் என்று முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறியுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் சட்டசபை தேர்தலை சந்திக்க எந்த கட்சியும் தயாராக இல்லை. இதை பா.ஜனதா ஏற்காது. ஆட்சியை நடத்த முடியாவிட்டால், கூட்டணி அரசு வெளியேற வேண்டும். பா.ஜனதா ஆட்சியை நடத்த தயாராக உள்ளது.

சட்டசபையில் பா.ஜனதா 105 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த அரசு கவிழ்ந்தால், பெரிய கட்சியாக இருக்கும் பா.ஜனதா, என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யும். ஆனால் சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற வாய்ப்பு வழங்கவே மாட்டோம். முன்கூட்டியே தேர்தல் வேண்டாம் என்று காங்கிரசார் சொல்கிறார்கள்.

ஆனால் கூட்டணியில் உள்ள ஜனதா தளம் (எஸ்), முன்கூட்டியே தேர்தல் வரும் என்று சொல்கிறது. தேவேகவுடாவின் கருத்தை தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளதாக குமாரசாமி கூறுகிறார். மொத்தத்தில் இந்த கூட்டணி அரசு குழப்பத்தில் உள்ளது. இதனால் வளர்ச்சி பணிகள் முழுமையாக முடங்கிவிட்டன. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்துவதால், மக்கள் மீது கூடுதல் சுமை திணிக்கப்படும். இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து