8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்த நாய்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      உலகம்
blood donate dog 2019 06 23

லண்டன் : இங்கிலாந்தை சேர்ந்த பிராம்பிள் என்ற நாய் கடந்த 8 ஆண்டுகளில் 26 முறை ரத்ததானம் செய்து 104 நாய்களை காப்பாற்றியுள்ளது.

இந்த நாய் ஒவ்வொரு முறை ரத்ததானம் செய்யும் போது 450 மில்லி கிராம் ரத்தம் கொடுத்து வருகிறது. இந் நாயின் உரிமையாளர் மரியா க்ரட்டாக் கூறுகையில்,

ஒரு நாய் பிறந்து ஒரு ஆண்டுக்குப் பிறகுதான் ரத்த தானம் செய்ய முடியும். பிராம்பிள் பிறந்த ஓராண்டுக்குப் பிறகுதான் ரத்த தானம் கொடுக்க ஆரம்பித்தது. ரத்த தானம் செய்த பின் அந்நாய்க்கு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது என்றார். மேலும் பிராம்பிள் இந்த ரத்த சேவையை கவுரவிக்கும் விதமாக ரத்த வங்கி பிராம்பிள் கழுத்தில் நான் உயிரிலே காப்பாற்றக் கூடியவன் என எழுதப்பட்ட சிவப்புத் துணி கட்டப்பட்டுள்ளது.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து