முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த காரணம் டோனியின் அட்வைஸ்தான்: ஷமி

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்த டோனியின் அட்வைஸ் தான் முக்கிய காரணமாக இருந்தது என்று ஷமி தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. 225 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.  ஆனால் கடைசி நான்கு ஓவர்களை பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோர் சிறப்பாக பந்து வீச இந்தியா 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் 46 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 24 பந்தில் 32 ரன்கள் தேவைப்பட்டது. 47-வது ஓவரை பும்ரா வீசினார். முதல் இரண்டு பந்துகளில் ஒரு ரன் விட்டுக் கொடுத்த பும்ரா, 3-வது பந்தில் சிக்ஸ் விட்டுக் கொடுத்தார். ஷார்ட் பிட்ச் ஆக வீசப்பட்டதை முகமது நபி டீப் மிட்விக்கெட் திசையில் சிக்சருக்கு தூக்கினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் இந்திய பந்து வீச்சாளர்கள் யார்க்கர் யுக்தியை பயன்படுத்தினர். யார்க்கர் மூலம் எதிரணியை திணறடித்தனர். கடைசி 9 பந்துகளையும் பும்ரா யார்க்கராகவே வீசினார். முகமது ஷமியும் யார்க்கர் மட்டுமே வீச வேண்டும் என்ற நோக்கத்தில் கடைசி ஓவரை வீசினார். கடைசி ஓவரின் 3-வது மற்றும் 4-வது பந்தில் முகமது ஷமி அடுத்தடுத்து விக்கெட் வீழ்த்தினார்.

5-வது பந்தில் விக்கெட் வீழ்த்தினால் ஹாட்ரிக் சாதனைப் பெறலாம் என்ற நோக்கத்தில் ஷமி பந்து வீச இருந்தார். அந்த நேரத்தில்  டோனி ஆலோசனை வழங்கினார். அதுதான் ஹாட்ரிக் விக்கெட்டுக்கள் வீழ்த்த உதவியாக இருந்தது என்று ஷமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஷமி கூறுகையில், டோனி என்னிடம், உங்களுடைய திட்டத்தில் எந்தவித மாற்றமும் செய்ய முயற்சிக்க வேண்டாம். ஹாட்ரிக் சாதனைப் படைக்க வாய்ப்புள்ளது. இது போன்ற வாய்ப்புகள் கிடைப்பது மிகவும் அரிதானது என்றார். அதை நான் சரியாக செய்தேன். ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து