முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி விளையாடிய விதம் ஏமாற்றம் அளித்தது: டெண்டுல்கர்

ஞாயிற்றுக்கிழமை, 23 ஜூன் 2019      விளையாட்டு
Image Unavailable

லண்டன் : ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டோனி - கேதர் ஜாதவ் ஜோடி ஆடியவிதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்  சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் சவுதாம்ப்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஆப்கானிஸ்தானின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறியது. லோகேஷ் ராகுல் 30 ரன்களும், விராட் கோலி 67 ரன்களும், விஜய் சங்கர் 29 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். விராட் கோலி ஆட்டமிழக்கும் போது இந்தியா 30.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்  டோனியுடன் கேஜர் ஜாதவ் ஜோடி சேர்ந்தார். டோனி 26.2 ஓவரிலேயே களம் இறங்கினார். கேதர் ஜாதவ் - டோனி ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 14 ஓவரில் 57 ரன்களே எடுத்தது. இதனால் இந்தியாவின் ஸ்கோர் மிகவும் மந்தமான நிலையில் உயர்ந்தது. இறுதியாக 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களே சேர்த்தது. டோனி (36 பந்தில் 24 ரன்) - கேதர் ஜாதவ் (48 பந்தில் 31 ரன்) ஜோடி 84 பந்தில் 57 ரன்கள் மட்டுமே எடுத்தது மகிழ்ச்சி அளிக்கவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெண்டுல்கர் கூறுகையில், இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு சற்று ஏமாற்றம் அளித்தது. இன்னும் கொஞ்சம் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். குறிப்பாக டோனி - கேதர் ஜாதவ் ஜோடி விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கவில்லை. மிகவும் மந்தமாக விளையாடினார்கள். நாம் 34 சுழற்பந்து வீச்சு ஓவர்களை எதிர்கொண்டு 119 ரன்கள் மட்டுமே சேர்த்தோம். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக நாம் வலிமையாக இல்லை. இந்த விஷயத்தில் நேர்மையான நோக்கம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து